இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு, கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது
#Egg
#Export
#Import
#economy
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு, கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த முட்டைகள், நாளை முதல், உணவகங்கள் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுக்கு, 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து மொத்தமாக 20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
அதில், முதற்கட்டமாக 10 இலட்சம் முட்டைகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



