மிருசுவில் பகுதியில் வேகமாக சென்ற வேன் மரத்தில் மோதி விபத்து: சாரதி பலி

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் வேன் சாரதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வேன் இன்று அதிகாலை 3 மணியளவில் கொடிகாமத்திலிருந்து மிருசுவில் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தின் போது வேனின் சாரதி மாத்திரம் உடனிருந்ததால் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த குமாரசிங்கம் கஜீபன் என்ற 27 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணம் எனவும், உயிரிழந்தவரின் சடலம் கொடிகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விபத்தில் வேனும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



