சவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் யாத்ரீகர்கள் 20 பேர் உயிரிழப்பு

#SaudiArabia #Bus #Accident #Death #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
சவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் யாத்ரீகர்கள் 20 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவின் தென்மேற்கில் நேற்று மாலை பயணிகள் சிலர் பேருந்தில் யாத்ரீகர்களுடன் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென பேருந்து பிரேக் பிடிக்காததை அடுத்து பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி, கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. 

இதில், உம்ரா யாத்ரீகர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பாதிக்கப்பட்டவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் சென்று கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!