மாமல்லபுரத்தில் பிரம்மாண்டப் பாறைகளை செதுக்கி வடிவமைத்து குடைந்த கற்பாறைத் தொட்டி

மாமல்லபுரத்தில் மூன்று இடங்களில் கற்தொட்டிகளை காணலாம்.
ஒரு பிரம்மாண்டப் பாறையை அப்படியே செதுக்கி வடிவமைத்து குடைந்து இந்த கற்பாறைத் தொட்டியை உருவாக்கியுள்ளனர்.
இக்கால பட்டை தீட்டும் கருவிகளை கொண்டு செய்ததுபோல் அவ்வளவு நேர்த்தியாக இருக்கின்றது.
சிற்பிகளின் நீர் தேவைக்கோ அல்லது வேறு ஏதேனும் நீர் தேவைக்கோ இத்தொட்டிகள் குடையப்பட்டிருக்கலாம்.
ஒரு தொட்டிக்கு கோபியர்கள் வெண்ணெய் கடையும் தொட்டி என்று தொல்லியல்துறை பெயர் வைத்துள்ளது.
மற்றொரு தொட்டிக்கு திரௌபதி குளியல் தொட்டி என்று தொல்லியல் துறை வழிகாட்டு பலகையில் பெயர் உள்ளது.
அதே இடத்தில் மகாபாரத திரௌபதிக்கும் இந்த குளியல் தொட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
காலவழக்காக அவ்வாறு அழைக்கப்படுகிறது என்று தொல்லியல் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
ஆங்கிலேய சுற்றுலா பயணிகளிடம் ஒரு கைடு இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்.
திஸ் இஸ் பாத்டப். இன் மகாபாரதா பாண்டவாஸ் குயின் திரௌபதி பாத்திங் இன் திஸ் டப். திஸ் இஸ் அமேசிங் ஒன் ஆப்த வொண்டர்புல் ப்ளேஸ்...
அந்த வெளிநாட்டு பயணி ஒருவர் முகத்தில் ஒரு மாறுதல்.. அப்படியே கைடை ஒரு பார்வை பார்க்கிறார்.அது வியப்பா அல்லது நக்கலா தெரியவில்லை.மற்றொரு பயணி சிரித்தேவிட்டார்.
நம்ம வரலாறு இப்படி சிரிப்பா சிரிக்குதே என்ற ஆதங்கம் மட்டுமே நமக்கு.






