ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் பயிற்சி டாக்டர்கள் வேலைநிறுத்தம்

#England #doctor #strike #Salary #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் பயிற்சி டாக்டர்கள் வேலைநிறுத்தம்

இங்கிலாந்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களில் பஸ் டிரைவர்கள், தபால் ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலையை விட்டு வெளியேறி உள்ளனர். இதே கோரிக்கையை இங்கிலாந்தில் உள்ள பயிற்சி டாக்டர்களும் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை, பிரசவம் உள்ளிட்ட முக்கியமான சேவைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் இன்று போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!