முதல் ஆளில்லா விமானத்தை அறிமுகம் செய்த தைவான்
#China
#War
#Thaiwan
#Drone
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் சீனா, ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. அவ்வப்போது போர் விமானங்களை அனுப்பி தைவானை பதற்றமடைய வைக்கிறது.
தைவானைச் சுற்றி போர் ஒத்திகையை மேற்கொள்கிறது. சீனா போர் தொடுத்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தைவான் கூறி உள்ளது.
சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், தைவான் முதல் போர்ட்டபிள் ட்ரோனை (ஆளில்லா விமானம்) இன்று அறிமுகம் செய்து சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
ரஷியாவுக்கு எதிரான சண்டையில் உக்ரைன் வீரர்கள் பயன்படுத்தி வரும் அமெரிக்க மாடலைப் போன்று (ஸ்விட்ச்பிளேடு 300) இந்த ஆளில்லா விமானம் உள்ளது.
இந்த ஆளில்லா விமானம் மூலம் எதிரிகளின் இலக்கை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும்



