இழுவைப் படகினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அனலைதீவு கடற்றொழிலாளர் மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளிப்பு

#Boat #Court Order #Jaffna #Police #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
 இழுவைப் படகினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக  அனலைதீவு கடற்றொழிலாளர் மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளிப்பு

உள்ளூர் இழுவைப் படகினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்தனர்.

நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு சென்ற அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜோன் பொஸ்கோ, செயலாளர் வே.வின்சன் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச செயலாளர் அ.அன்னராசா ஆகியோர் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுநதரனை சந்தித்து மகஜரை கையளித்தனர்.

அந்த மகஜரில் குருநகர் பகுதியை சேர்ந்த உள்ளூர் இழுவைமடி தொழிலாளர்களால் உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!