தனியார் பாடசாலையில் கற்கும் மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய 4 ஆசிரியர்கள் உட்பட 6 பேர் விளக்கமறியலில்

பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் சிறுவர்கள் மற்றும் சிறுவர்கள் விடுதியில் வைத்து தாக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த 12ஆம் திகதி இரவு பொக்காவல தனியார் பாடசாலை ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் குழுவொன்றே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி கண்டி பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த தனியார் பாடசாலையின் ஆசிரியர்கள் 04 பேரும் விடுதியின் வார்டன்கள் 02 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதியில் ஒழுக்கக் காரணங்களுக்காக 05 சிறுமிகளும் 05 ஆண் சிறுவர்களும் கொடூரமாக நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (14) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மார்ச் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தைகள் கண்டி வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



