நேட்டோ படைகள் உக்ரைனில் காலடி வைத்தால் பிரித்தானியாவை சுனாமி மூலம் அழிக்க ரஷ்ய திட்டம்

உக்ரைனுக்குள் நுழையும் நேட்டோ படைகளுக்கு பதில் அணு ஆயுத ஏவுகணை தாக்குதல் நடத்தி பிரித்தானியாவை முற்றாக அழிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓய்வுபெற்ற ரஷ்ய இராணுவ ஜெனரல் Yevgeny Buzhinsky இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடற்பரப்பில் நடத்தப்படும் Poseidon அணு ஏவுகணைகளை வெடிக்கச் செய்வதால் ஏற்படும் கதிர்வீச்சு அலைகள் 1000 அடி உயரத்தில் இருந்து வந்து பிரிட்டனை முற்றிலுமாக அழித்துவிடும் என்று ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ ஜெனரல் கூறுகிறார்.
ரஷ்யா அணுகுண்டு ஏவுகணைத் தாக்குதலை நடத்தினால், பிரிட்டன் மீண்டும் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்காது என ரஷ்ய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் புஷின்ஸ்கி கூறினார்.
ரஷ்யாவின் சக்திவாய்ந்த அணுவாயுத ஏவுகணையான SMRAT-2 ஏவுகணையை பயன்படுத்தி பிரித்தானியா தாக்கப்படலாம் என ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
"போஸிடான்" நீருக்கடியில் ஆளில்லா விமானம் பிரிட்டனைத் தாக்கினால், அது தவிர்க்க முடியாமல் சுனாமியை ஏற்படுத்தும் என ரஷ்ய அதிபரின் முக்கிய மனிதர் என்றும், ரஷ்ய அதிபரின் உதவியாளர் என்றும் அழைக்கப்படும் விளாடிமிர் சோலோவியோவ், செய்தியாளர் சந்திப்பில் புன்னகையுடன் கூறினார்.
உக்ரைன் போர்க்களத்தில் தங்களால் முன்னேற முடியாத இராணுவத் தெரிவுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.



