கொழும்பின் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணை ஒத்திவைப்பு

கொழும்பின் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணையை கொழும்பு பிரதான நீதவான் இன்று மார்ச் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இன்றைய தினம் பிரேத பரிசோதனை விசாரணைகளை கேட்டறிய நிரந்தர நீதவான் இல்லாமைக் காரணத்தினால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 15ஆம் திகதியன்று நீதிவான் ராஜீந்திர ஜெயசூரிய, தொழிலதிபர் தினேஷ் ஷாஃடர் மரணம் தொடர்பான காரணத்தை கண்டறிய, தடயவியல் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.
தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதால் நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்
2022 டிசம்பர் 15 அன்று மாலை கொழும்பு-பொரளையில் உள்ள பொது மயானத்தில் தினேஷ் ஷாஃப்டர் மயக்கமடைந்து வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் இருந்துபோது மீட்கப்பட்டு தேசிய
எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது



