மாலைதீவு தொடர்பான கருத்து: மன்னிப்புக் கோரிய அமைச்சர்

இலங்கையின் அண்டை நாடான மாலைதீவு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தாம் வெளியிட்ட அறிக்கையினால் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் பெர்லினில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சியில் மாலைதீவுகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து தவறாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாலைதீவின் அழகிய தீவுகள் குறித்த தனது அறிக்கை தவறாக விளக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.
மாலைதீவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகள் தீவுகளுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும், இலங்கைக்கு வரும்போது சலிப்படையவில்லை என்றும் அமைச்சர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, மாலைதீவின் சில அமைச்சர்கள் உட்பட பிரஜைகள் சிலர் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.



