இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதி கிடைக்கும்!
#SriLanka
#Sri Lanka President
#IMF
#Finance
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

எதிர்வரும் 20 ஆம் திகதி, 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது
பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியதன் பின்னர், இம்மாதம் அதன் முதல் தவணை இலங்கைக்கு கிடைக்கபெறுமென எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த அனுமதி கிடைக்கும்பட்சத்தில், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



