நடுவானில் பயணி உயிரிழந்ததால் திடீரென பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் டோஹாவிற்கு சென்றுகொண்டிருந்த இண்டிகோ 6E-1736 விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து மருத்துவ அவசரத்திற்காக பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் உள்ள ஜின்னா டெர்மினல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டது.
விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானம் தரையிறங்கியவுடன்,மருத்துவ உதவி கோரிய நபரை பரிசோதனை செய்த பின்பு அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், எங்கள் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பகிர்கிறோம் .
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, விமானத்தின் மற்ற பயணிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் தற்போது செய்து வருகிறோம்” என்று இண்டிகோ விமான நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த பயணி நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



