தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை: சஜித்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Sajith Premadasa #government #Election #Lanka4
Mayoorikka
2 years ago
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை: சஜித்

தேர்தலை நடத்தாமல்  தந்திரமான தந்திரங்களை பிரயோகித்த ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உரிய பதில்களை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும், அதனை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பாடுபட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை புலத்சிங்களவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டின் பொது பிரதிநிதிகளை வாயை மூடி உட்காருங்கள் என அச்சுறுத்திய ஜனாதிபதிக்கு நீதிமன்றம்  பதிலடி கொடுத்துள்ளது.

அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சிலர் மௌனம் காக்கும் வேளையில் சமகி ஜன பலவேகய நாட்டிலுள்ள  20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் சார்பாக தேர்தலை நடத்துமாறு கோரி நீதிமன்றத்திற்கு சென்றதாகவும், தீர்ப்பு  வாக்களிப்பது மக்களின் உரிமை எனறும் உறுதி செய்யப்பட்டது.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டுவதில் தொடர்ந்து நம்பிக்கை வைத்து வரும் ஒரேயொரு அரசியல் கட்சியாக சமகி ஜன பலவேக மாத்திரமே எதிர்காலத்திலும் தம்மை அர்ப்பணிப்பதாக பிரேமதாச தெரிவித்தார்.

பொருளாதாரம் சிறியதாக இருந்தால், திவாலான நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்றும், வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அணி சமகி ஜன பலவேகவிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!