கண்டியில் விசேட சோதனையில் போதைப்பொருளுடன் 10 பேர் கைது

#Arrest #drugs #SriLanka #kandy #Police #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
கண்டியில் விசேட சோதனையில் போதைப்பொருளுடன் 10 பேர் கைது

கண்டி போகம்பரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சோதனையில் பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸார் மற்றும் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவு அதிகாரிகள் இணைந்து அப்பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

06 ஆண்களும் நான்கு பெண்களும் அங்கு கைது செய்யப்பட்டனர்

அவர்களிடம் இருந்து 39 கிராம் 265 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள் ஹீரஸ்ஸகல, சுதுஹும்பொல, மஹய்யாவல, கண்டி மற்றும் திகன பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள்.

பெண் சந்தேகநபர்கள் 24 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் கட்டுகஸ்தோட்டை மற்றும் வைத்தியசாலை லேன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!