பாடசாலை மாணவர்களுக்கு மலிவான விலையில் பயிற்சி புத்தகங்களை வழங்க நடவடிக்கை

#students #School Student #School #Ministry of Education #Minister #Susil Premajayantha #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
பாடசாலை மாணவர்களுக்கு மலிவான  விலையில் பயிற்சி புத்தகங்களை வழங்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிக்கு இன்னும் சுமார் 4,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உயர்தர விடைத்தாள்கள் பரீட்சை திருத்தும் பணி தாமதமாவதால் ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை உள்ளடக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!