ஒன்பது வயதில் 3 உலக சாதனைகளை படைத்த கனேடிய சிறுமி
#Canada
#School
#Girl
#WorldRecord
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
மமாதி வினோத் என்ற ஒன்பது வயது சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
சாகச வளைய நடனத்தில் இந்தச் சிறுமி மூன்று பிரிவுகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் வைத்து இந்த சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார். வெவ்வேறு நிலைகளில் சாகச வளையத்தில் சுழற்றுவதன் மூலம் இந்த சாதனையை குறித்த சிறுமி படைத்துள்ளார்.
மகளின் சாதனைகள் தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக சிறுமியின் தாய் காதம்பரி வினோத் தெரிவித்துள்ளார். இயற்கையாகவே சாகச வளைய நடனத்தில் மமாதி அபார திறமைகளை வெளிப்படுத்தி வந்தார் என அவரது தாய் கூறுகின்றார்.



