13 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட 31 வயது பெண்

அமெரிக்காவின் கொல ராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்டரியா செரானோ (வயது31). இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார்.
இதில் ஆண்டரியா செரானோ கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஆண்ட்ரியா செரானோ மீது குழந்தை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இதில் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆண்ட்ரியா செரானோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து சிறுவனின் தாய் கூறும்போது, என் மகனின் குழந்தை பருவம் பறிக்கப்பட்டதை போல் உணர்கிறேன். இப்போது அவன் தந்தையாக வேண்டும்.
அவன் பாதிக்கப்பட்டுள்ளான். அதனுடனேயே அவன் வாழ்நாள் முழுவதும் வாழப் போகிறான். இந்த வழக்கில் பாலினம் தலைகீழாக இருந்திருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும்.
இவன் ஒரு ஆணாகவும், அவன் (சிறுவன்) சிறுமியாகவும் இருந்திருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று உணர்கிறேன் என்றார்.
இந்த வழக்கில் ஆண்டரியா செரானோவுக்கு பாலியல் குற்வாளி என்ற குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக விசாரணை மே மாதம் நடைபெறுகிறது.



