மரை இறைச்சியை எடுத்து வந்தவர் கைது
Kanimoli
2 years ago

சட்டவிரோதமாக மரை இறைச்சியை எடுத்து வந்தவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 3 கிலோ மரை இறைச்சியை கிளிநொச்சியில் இருந்து எடுத்து வந்தவேளை ஊர்காவற்துறை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். அவரை இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிவான் உத்தரவிட்டார்.



