அனலைதீவில் சட்டவிரோதமான மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது!
#Police
#Arrest
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

அனைலதீவு பாலத்திலிருந்து ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் பாலம் ஊடாக இன்றைய தினம் கடத்தவிருந்த சட்டவிரோதமான ஒரு தொகை மாட்டிறைச்சியுடன்அதனை கடத்தி வந்த நபரை அனலைதீவில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் கைது செய்துள்ளனர்.
இக் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் யாழ் - மாதகல் பகுதியைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார்.



