தமிழகத்தில் இருந்து வருகை தந்த கச்சைத்தீவு பக்தர்கள் தமக்கு வழங்கிய உணவு திருப்தியாக அமையவில்லை என வருத்தம்

#kachchaitheevu #people #Tamil People #India #SriLanka #Lanka4
Kanimoli
2 years ago
தமிழகத்தில் இருந்து  வருகை தந்த கச்சைத்தீவு பக்தர்கள் தமக்கு வழங்கிய உணவு திருப்தியாக அமையவில்லை  என வருத்தம்

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு உற்சவம் கடந்த 3, 4ஆம் திகதிகளில் இடம்பெற்றது. 

இதில் 2800 இலங்கை பக்தர்களும் 2100 இந்திய பக்தர்களும், வியாபாரிகள், உத்தியோகத்தர்கள் 200 பேர் என மொத்தமாக 5100 பேர் வருகை தந்தனர். 

இதில் பல்வேறுபட்ட குழறுபடிகள் குறைபாடுகள் மற்றும் ஒழுங்கமைப்பு சீரின்மை காணப்பட்டதாக விமர்சிக்கப்படுகிறது. 

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து  வருகை தந்த பக்தர்கள் தமக்கு வழங்கிய உணவு திருப்தியாக அமையவில்லை அதே நேரம் இரண்டு மாதங்களாக பெருநாள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டும்  உணவினை கூட மிக நேர்த்தியாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. 

உணவினை  வழங்க வேண்டும் என்பதற்காகவே ஏதோ ஒன்றை வழங்கினார்கள் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முறையான மலசலகூட  வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. 

8000 யாத்திரிகள் வருவார்கள் என  உத்தேசித்தபோதும் அதற்கு ஏற்றவகையில் போதுமான மலசலகூடங்கள் அமைகப்படவில்லை. 
அமைக்கப்பட்ட மலசல கூடங்களிலும்  முறையாக பராமரிப்பு அமையவில்லை. 

அதே போல் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11மணிமுதல் குடிநீருக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தது. 
அடுத்த முறை யாத்திரிகர்களின் நலனை கருத்திற்கொண்டு சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இலங்கை கடற்படையினரின் ஆயுதங்கள் தமக்கு அச்சத்தை தருவதாகவும் இந்திய பக்தர்கள் தெரிவித்தனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!