யாழ். மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறில்
#TNA
#municipal council
#Jaffna
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

யாழ். மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறில் அவர்களை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் தமிழ் அரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில், பெரும்பாலானோர் சொலமன் சிறில் அவர்களது பெயரை முன்மொழிந்தனர். அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சொலமன் சிறில் அவர்களுக்கான ஆதரவை திரட்டிய பின்னர் அவரை முதல்வர் வேட்பாளராக களமிறக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 19 ஆம் திகதி உள்ளூராட்சிசபைகள் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



