கண்டி – மஹியங்கனை பிரதான வீதி அல்லது 18 வளைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

#kandy #Road #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
கண்டி – மஹியங்கனை பிரதான வீதி அல்லது 18 வளைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கண்டி – மஹியங்கனை பிரதான வீதி அல்லது 18 வளைவு வீதியை நேற்று (04) பாறைகள் மற்றும் மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக பொலிசார் தற்காலிகமாக வீதியினை மூடியுள்ளனர்.

மோசமான காலநிலை காரணமாக வீதியின் 13 மற்றும் 14 ஆவது வளைவுகளுக்கு இடையில் வீதியில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், வீதி முற்றிலும் தடைபட்டுள்ளது.

அதன்படி அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரந்தெனிகல – பதுளை வீதி அல்லது ராஜ மாவத்தை தன்னேகும்புர மணிக்கூட்டு கோபுரச் சந்திக்கு அருகில் வந்து சந்தி 21 இல் இடப்புறமாகத் திரும்பி பதுளை – மஹியங்கனை வீதியில் மஹியங்கனை நகரை அடையலாம்.

இதேவேளை, வீதியில் சரிந்து வீழ்ந்துள்ள மண்ணை அகற்றும் பணி இன்று காலை முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!