இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு

#Ali Sabri #India #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சியை எளிதாக்குவதற்கான ஒத்துழைப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முதலீடு, வர்த்தகம் மற்றும் கூட்டாண்மை மேம்பாடு குறித்தும் இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!