வங்காளதேசத்தில் ஆக்சிஜன் உற்பத்தி சாலையில் தீ விபத்து - 6 பேர் மரணம்
#Bangladesh
#Accident
#Rescue
#fire
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago
வங்காளதேசத்தின் சிட்டகாங்க் அருகே சீதகுண்டா பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரவு நிலவரப்படி 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.