கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானியை கொலை செய்த நபர் கைது

#Russia #Covid 19 #Covid Vaccine #Scientist #Murder #Arrest #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானியை கொலை செய்த நபர் கைது

கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவை சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கடந்த 2020-ம் ஆண்டு கண்டுபிடித்தனர். 18 பேர் கொண்ட அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவில் ஆண்ட்ரி போட்டிகோவ் (வயது 47) என்ற விஞ்ஞானியும் ஒருவர். 

இந்நிலையில், ஆண்ட்ரி போட்டிகோவ் நேற்று முன்தினம் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். 

அவரது கழுத்து பெல்ட்டால் நெரிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அண்டிருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அண்ட்ரியை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக 29 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளரான ஆண்ட்ரி கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அவருடன் சேர்ந்து மொத்தம் 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!