தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
#SriLanka
#sri lanka tamil news
#M K Sivajilingam
#Tamil People
#Tamilnews
#Tamil
Prabha Praneetha
2 years ago

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியான தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
வல்வெட்டித்துறையிலுள்ள வீட்டில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், நேற்று உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உயர் இரத்த அழுத்தம் ஆபத்தானளவில் அதிகரித்ததால் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். தொடர்ந்தும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.



