பொருளாதார சர்வதேச சுட்டியின் தரப்படுத்தலில் பின்னுக்கு தள்ளப்பட்ட இலங்கை!

#SriLanka #economy #Development #Investment #Finance #money
Mayoorikka
2 years ago
பொருளாதார  சர்வதேச சுட்டியின் தரப்படுத்தலில் பின்னுக்கு தள்ளப்பட்ட இலங்கை!

உலக நாடுகளின் பொருளாதாரத்தினை வரிசைப்படுத்தும் சர்வதேச சுட்டியான Brand Finance Global Ranking Index இன் சமீபத்திய தரவரிசையின்படி, இலங்கை 115 வது இடத்திற்கு வீழ்ந்துள்ளது.

சுட்டெண்ணின் படி, கடந்த வருடம் 73வது இடத்தில் இருந்த இலங்கை, 42 நாடுகளுக்கு பின்தள்ளப்பட்டு இந்த நிலையை அடைந்துள்ளது.இது தொடர்பாக பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் அண்மையில் (மார்ச் 02, 2023) வெளியிட்ட அறிக்கையின்படி இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.  

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அந்த அறிக்கை காட்டுகிறது.இந்த உலகளாவிய சுட்டெண்ணின் படி, இந்த ஆண்டு மந்தநிலையின் அடிப்படையில் அதிக நிலைமையை தெரிவிக்கும் நாடாகவும் இலங்கை உள்ளது.

இந்த குறியீட்டின்படி, கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைக் கொண்ட ஜாம்பியா மற்றும் மியான்மர் முறையே 113 மற்றும் 114 வது இடத்திலும், ஈராக் 116 வது இடத்திலும், லாவோஸ் 117 வது இடத்திலும், உகாண்டா 118 வது இடத்திலும் உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!