ஆயுர்வேத மருந்துகளுக்கான பொருட்கள் பற்றாக்குறை: GAMOA

ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் குறைந்தது 130 அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் (GAMOA) இன்று கூறியுள்ளது.
பெரும்பாலான பொருட்கள் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
"சப்ளையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்தன. இது எதிர்காலத்தில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தக்கூடும்" என்று அவர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் ஆயுர்வேத மருந்துச்சீட்டை மருத்துவர்களால் பூர்த்தி செய்ய முடியாது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது என டாக்டர் ஹேவாகமகே தெரிவித்தார்.
எனவே, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சப்ளையர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் GAMOA கோரிக்கை விடுத்துள்ளது.



