உலக நாடுகளில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை தரப்படுத்தல்!
#SriLanka
#Tourist
#Summer
#bird species
#Birds
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

உலக நாடுகளில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கையை போர்ப்ஸ் சஞ்சிகை தரப்படுத்தியுள்ளது.
சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும் மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும் தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப் கோட்டில் இருந்து டொமினிக்கன் குடியரசு வரை திமிங்கலங்களை பார்க்கக்கூடியதாக இருந்தாலும், இலங்கையில் மாத்திரமே எளிதில் நீலத் திமிங்கிலங்களைக் காண முடியும் எனவும் போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.



