வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம்

#UnitedKingdom #PrimeMinister
Prasu
2 years ago
வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம்

சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் செய்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் உள்ள காணொளியில் பிரதமர் சீட் பெல்ட் இல்லாமல் தோன்றியதை அடுத்து லங்காஷயர் காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டது. அபராதத்தை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

பிரதமர் இது தவறு என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரியுள்ளார். அவர் நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக்கு இணங்குவார்.என எண் 10 செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இது குறித்து காவல்துறை கருத்து தெரிவிக்கையில், லங்காஷயரில் ஒரு பயணி ஒருவர் ஓடும் காரில் சீட் பெல்ட் அணியத் தவறியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த விஷயத்தைப் பார்த்த பிறகு, லண்டனைச் சேர்ந்த 42 வயதுடைய நபருக்கு நிலையான அபராதம் என்ற நிபந்தனை சலுகையுடன் இன்று வழங்கியுள்ளோம். என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு, பதவியில் இருக்கும் போது சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்ட இரண்டாவது பிரதமர் ரிஷி சுனக் ஆவார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!