சீரற்ற காலநிலை 65,000 இற்கும் அதிகமான மின் துண்டிப்புகள்: களத்தில் மின்சாரசபை ஊழியர்கள்
நாடு பூராகவும் நிலவும் சீரற்ற காலநிலையினால் அநேகமான பிரதேசங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்களுக்காக பணி செய்யும் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
மரம் முறிந்து விழுதல், தூண்கள் உடைந்து விழுதல் போன்ற பல்வேறு அனர்த்தங்களின் காரணமாக இவ்வாறு மின்துண்டிப்புகள் இடம்பெற்றுள்ளன. இன்று காலையில் 65,000 இற்கும் அதிகமான மின் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 26,000 மின் துண்டிப்புகள் மீண்டும் இயழ்பு நிலைக்கு திரும்பியுள்ளன. தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை பயன்படுத்தி சகல மின் துண்டிப்புகளையும் இயழ்பு நிலைக்கு திருப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மற்றும் சகல பணியாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றன.
இருந்தபோதும், மின் துண்டிப்புகளை இயழ்பு நிலைக்கு திருப்பும் செயற்பாடுகளில் சீரற்ற காலநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும் மக்களுக்கு உயரிய சேவையை வழங்க நடவடிக்கை எடுப்போம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜெயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
