டித்வா புயல் அனர்த்தம்: திருகோணமலையில் 3844 குடும்பங்களை சேர்ந்த 11350 நபர்கள் பாதிப்பு!

#SriLanka
Mayoorikka
1 hour ago
டித்வா புயல் அனர்த்தம்: திருகோணமலையில் 3844 குடும்பங்களை சேர்ந்த 11350 நபர்கள் பாதிப்பு!

சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 3844 குடும்பங்களை சேர்ந்த 11350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 25.11.2025 _2025.11.28 இன்று (28) காலை 8.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதில் 95 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 3515 குடும்பங்களை சேர்ந்த 9683 நபர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 04 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 204 குடும்பங்களை சேர்ந்த 589 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 85 குடும்பங்களை சேர்ந்த 299 நபர்களும், தம்பலகாமம் 188 குடும்பங்களை சேர்ந்த 563 நபர்களும்,மொறவெவ 34 குடும்பங்களை சேர்ந்த 99 நபர்களும், சேருவில 105 குடும்பங்களை சேர்ந்த 401 நபர்களும், வெருகல் 16 குடும்பங்களை சேர்ந்த 48 நபர்களும், மூதூர் 750 குடும்பங்களை சேர்ந்த 2485 நபர்களும்,கிண்ணியா 1600 குடும்பங்களை சேர்ந்த 3800 நபர்களும்,கோமரங்கடவல 05 குடும்பங்களை சேர்ந்த 22 நபர்களும் , பதவிஸ்ரீபுர 40 குடும்பங்களை சேர்ந்த 123நபர்களும், குச்சவெளி 870 குடும்பங்களை சேர்ந்த 2880 நபர்களும், கந்தளாய் 151 குடும்பங்களை சேர்ந்த 630 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 இதில் தம்பலகாமம் பிரதேச செயல பிரிவில் தி/ஆதிகோனேஸ்வரா இடைத்தங்கல் முகாமில் 22 குடும்பங்களை சேர்ந்த 64 நபர்களும், இரு முகாம்களில் கிண்ணியா பாரதிபுரம் வைஷ்னவி மகாவித்தியாலயத்தில் 150 குடும்பங்களை சேர்ந்த 420 நபர்களும், கிண்ணியா அல் றவ்லா மகாவித்தியாலயத்தில் 30 குடும்பங்களை சேர்ந்த 95 நபர்களும் மொத்தமாக 180 குடும்பங்களை சேர்ந்த 515 நபர்களும், குச்சவெளி கமாஸ் நகர் பாலர் பாடசாலையில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 நபர்களும் பாதுகாப்பாக குறித்த இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை