ஆர்மீனியா ராணுவ நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 வீரர்கள் உடல்கருகி உயிரிழப்பு
#Death
#fire
#Accident
#Lanka4
Prasu
2 years ago

ஆர்மீனியாவில் அஸாட் என்ற இடத்தில் ராணுவ என்ஜினீயரிங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று அந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. தீ மின்னல் வேகத்தில் பரவியது. இந்த விபத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 15 பேர் சிக்கி பலியாகினர்.
மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



