அமெரிக்க மலைத்தொடரில் மாயமான பிரித்தானிய நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் தொடர்பில் ஷெரிப் அலுவலகம் எச்சரிக்கை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சான் கேப்ரியல் மலைத்தொடரில் மலையேற சென்ற பிரித்தானிய பிரபலம் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாயமான ஜூலியன் சாண்ட்ஸ் சான் கேப்ரியல் மலைத்தொடரில் மலையேற சென்றுள்ளார். பிரித்தானிய நடிகரான 65 வயது ஜூலியன் சாண்ட்ஸ். வெள்ளிக்கிழமை ஜனவரி 13ம் திகதி மவுண்ட் பால்டி பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
ஆனால், அதன் பின்னர் இதுவரை தங்களை அவர் தொடர்புகொள்ளவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் அதே பகுதியில் தான் தற்போதும் உள்ளாரா? அவருடன் வேறு எவரேனும் துணைக்கு சென்றுள்ளார்களா? இல்லை தனியாகவே மலையேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா என்பதில் குடும்பத்தினருக்கும் அவசர உதவிக் குழுவினருக்கும் தகவல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சான் பெர்னார்டினோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவிக்கையில்,
கடுமையான காலநிலை அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் ஹெலிகொப்டர் உள்ளிட்ட வசிதிகளை பயன்படுத்தவும் முடியாத சூழல் உள்ளதாக கூறியுள்ளனர்.
தரை வழியாக தேடுதல் நடவடிக்கை இருப்பினும், ட்ரோன் மற்றும் ஹெலிகொப்டர் வசதிகளை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே குறிப்பிட்டுள்ளனர். காலநிலையில் சாதகமான மாற்றம் ஏற்பட்டால் தரை வழியாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக சான் பெர்னார்டினோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் மாயமான நிலையில், தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதால், மலையேற முடிவு செய்துள்ளவர்களுக்கு ஷெரிப் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 4 வாரங்களில் மட்டும் மவுண்ட் பால்டி பகுதியில் 14 மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.



