உக்ரைன்-ரஷ்யா பிரச்சினைக்கு அமைதி வழி தீர்வுக்கு உதவ இந்தியா தயார்- பிரதமர் மோடி உறுதி

#D K Modi #Putin #Zelensky
Prasu
2 years ago
உக்ரைன்-ரஷ்யா பிரச்சினைக்கு அமைதி வழி தீர்வுக்கு உதவ இந்தியா தயார்- பிரதமர் மோடி உறுதி

உக்ரைன், ரஷியா இடையேயான போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

உக்ரைனில் நிலவி வரும் தற்போதைய சூழல் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். 

பிரச்சினைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்றும், தூதரக ரீதியான அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் அப்போது கூறினார். 

போர் நீடிப்பது அணுமின் நிலையங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

ஐ.நா சாசனம், சர்வதேச சட்டம், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவதும் குறித்து பிரதமர் எடுத்தரைத்தார். 

உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண உதவுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக மோடி அப்போது கூறியதாகவும் பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!