நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கான உத்திகள் குறித்து ஜனாதிபதி அறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார்
#SriLanka
#President
#IMF
Mugunthan Mugunthan
3 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் விதம் மற்றும் நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கான உத்திகள் தொடர்பில் பல கல்வியாளர்களுடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் கலாநிதி ஷாமினி குரே ஆகியோருடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.