எரிபொருள் அளவை பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்காக 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் அளவை 20 வீதத்தால் குறைக்குமாறு பொலிஸ்; மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்



