சீனாவிலிருந்து 300 மில்லியன் யுவான் கடனுதவி - பிரதமர்
#SriLanka
#China
#PrimeMinister
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கைக்கு 300 மில்லியன் யுவான் நிதியுதவி வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்கிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் விளைவு இதுவாகும்.
இந்த மானியத்தின் மூலம் இலங்கைக்கு அத்தியாவசியமான மருந்துகள், உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகத்தினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



