பாகிஸ்தானில் மின்வெட்டு 18 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

எரிசக்தி நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் நாட்டில் நீடித்து வரும் மின்வெட்டால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வெப்பத்தை எதிர்நோக்கும் பாகிஸ்தானியர்கள் மின்வெட்டு காரணமாக மேலும் சிரமங்களை எதிர்கொள்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, நகர்ப்புறங்களில் தினசரி 6 முதல் 10 மணிநேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது மற்றும் பாகிஸ்தானின் சில கிராமப்புறங்களில் சுமார் 18 மணிநேரம் வரை மின்வெட்டு நீடிக்கிறது.
நீண்ட கால மின்வெட்டு காரணமாக வர்த்தகர்கள் உட்பட பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புனித ரமழான் மாதத்தில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து பாகிஸ்தானியர்கள் கவலையடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வறண்ட வானிலை தொடரும் பட்சத்தில் மின்வெட்டை துண்டிக்க வேண்டியிருக்கும் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



