நெருக்கடிக்கு மத்தியில் சபாநாயகரால் அமலான முக்கிய சட்டம்
#SriLanka
#Parliament
Prasu
3 years ago
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் மிகைவரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று (07) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மிகைவரிச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) கையொப்பமிட்டுள்ளார்.
இதன்படி, இந்தச் சட்டம் 2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மிகைவரிச் சட்டமாக இன்று முதல் (08) அமுலுக்கு வரும்.
மிகைவரிச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.