“அனைவரும் வீதிக்கு வாருங்கள்” உலக மக்களுக்கு உக்ரைன் அதிபர் விடுத்த அழைப்பு!

#Ukraine
Nila
3 years ago
“அனைவரும் வீதிக்கு வாருங்கள்” உலக மக்களுக்கு உக்ரைன் அதிபர் விடுத்த அழைப்பு!

உக்ரைனுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்டுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தனது சமீபத்திய காணொளியில் அவர் வழக்கத்துக்கு மாறாக யுக்ரேனிய மொழியில் அல்லாது ஆங்கிலத்தில் பேசினார். 

ரஷ்யாவின் போர் யுக்ரேனுக்கு எதிரானது மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள மக்களின் சுதந்திரத்துடன் இது தொடர்புடையது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வளத்தை பயன்படுத்துவதை உலகம் நிறுத்த வேண்டும் என்று ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.

உங்கள் அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வீதிகளுக்கு வாருங்கள், அமைதியின் பெயரால் யுக்ரேனை ஆதரிக்கவும், சுதந்திரத்தை ஆதரிக்கவும், எங்களுடைய வாழ்க்கையை ஆதரிக்கவும் வாருங்கள் என்று ஸெலென்ஸ்கி அந்த காணொளியில் அழைப்பு விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!