உக்ரைனில் செய்தி ஒளிப்பதிவாளராக பணி புரிந்து வந்த பியர் ஜாக்ர்ஸெவஸ்கி கொலை - அமெரிக்கா அறிவிப்பு

#Ukraine #Russia #Death
Prasu
3 years ago
உக்ரைனில் செய்தி  ஒளிப்பதிவாளராக பணி  புரிந்து வந்த  பியர் ஜாக்ர்ஸெவஸ்கி  கொலை  - அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷியா இன்று 20-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில்  உக்ரைனில்  தனியார் செய்தி நிறுவனத்தின்  ஒளிப்பதிவாளராக பணி  புரிந்து வந்த , பியர் ஜாக்ர்ஸெவஸ்கி, உக்ரைனில் கீவ் நகருக்கி வெளியே கொல்லப்பட்டுள்ளார் என்று  அமெரிக்கா தெரிவித்துள்ளது .

லண்டனை சேர்ந்த  பியர் ஜாக்ர்ஸெவஸ்கி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைனில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இது  குறித்து அந்நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி சுசான் ஸ்காட் கூறுகையில் ;

கடந்த திங்கள் கிழமை கீவ்  தலைநகருக்கு வெளியே உள்ள ஹோரென்காவில் ஏற்பட்ட தீயினால் அவர்களது வாகனம் தாக்கப்பட்டது  ஜாக்ர்ஸெவ்ஸ்கி கொல்லப்பட்டார் மற்றும் அவரது சக ஊழியர் பெஞ்சமின் ஹால் காயமடைந்தார், 

நெட்வொர்க்கின் வெளியுறவுத்துறை நிருபராக பணிபுரியும் இங்கிலாந்தை சேர்ந்த ஹால் என்ற நிருபர் உக்ரைனில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!