உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு விருது அறிவிப்பு
Keerthi
3 years ago

ரஷ்யாவின் அனுதாபியான செக் குடியரசுத் தலைவர் மிலோஸ் ஜெமன், ரஷ்யப் படையெடுப்பை எதிர்கொள்ளும் துணிச்சலான உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு உயரிய அரச விருதை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு மிக உயர்ந்த செக் குடியரசின் கவுரவ விருதை வழங்க பாராளுமன்ற துணைக் குழு முன்மொழிந்தது. அதன் அடிப்படையில் அவருக்கு நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்படுகிறது.
அவரின் போர் தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டி இந்த விருது அறிவிக்கப்படுகிறது. அமெரிக்கா அவருக்கு நேரடியாக ஆதரவு தராவிட்டாலும் கூட, அவர் தனது நாட்டின் தலைநகரில் தங்கியிருந்து வீரர்களுடன் போராடி வருகிறார். அங்கிருந்து நாட்டை வழிநடத்துகிறார்' என்று தெரிவித்துள்ளார்.
\



