இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
#SriLanka
Nila
3 years ago

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9 ஆயிரத்து 809 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.
டெங்கு நுளம்புகளின் பெருக்கத்துக்கு 40 தொடக்கம் 45 வீதம் வரையான கழிவுப் பொருட்களே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மக்கள் அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.



