12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, கோர்பெவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி...!

Keerthi
3 years ago
12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, கோர்பெவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி...!

12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, கோர்பெவாக்ஸ் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் கோர்பெவாக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு செலுத்த கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய மருந்து ஆணையம் அனுமதி அளித்தது. இந்நிலையில் 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, கோர்பெவாக்ஸ் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி பயோலாஜிக்கல் நிறுவனம் சமீபத்தில் விண்ணப்பித்தது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை பொறுத்தவரையில், முதல் டோஸ் போட்டு 28 நாட்களுக்குப் பின் இரண்டாவது டோஸ் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!