இலங்கையில் அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து இன்று தீர்மானம்!
Nila
3 years ago

அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்று தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இடம்பெறவுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக அலுவலக நேரத்தை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் தனியார் நிறுவன முதலாளிமார் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்



