அநாவசிய தேவைகளை குறைக்கவும்: அரச நிறுவனங்களுக்கான விசேட சுற்றுநிருபம் இன்று வெளியீடு
Mayoorikka
3 years ago

அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்று வெளியிடப்படவுள்ளது என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதன்போது, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகன பாவனை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குளிரூட்டிகள் (ஏ/சி) மற்றும் தேவையற்ற விளக்குகள் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



