எதிர்வரும் 3 வருடங்களில் 7 மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை
Reha
3 years ago

எதிர்வரும் 3 வருடங்களில் 7 மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குவைட் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் குறித்த பாலங்கள் புனரமைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பழைய பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்களை நிர்மாணித்தல் மற்றும், குறுகலான பாலங்களை விரிவுபடுத்துவதன் மூலம் பயணிகளின் பயண நேரத்தை குறைத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வாய்ப்பு ஏற்படுவதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.



