இரண்டு அரசியல் கட்சி சின்னங்களை நீக்கியது தேர்தல் ஆணைக்குழு: காரணம் இதோ!

Prathees
3 years ago
இரண்டு அரசியல் கட்சி சின்னங்களை நீக்கியது தேர்தல் ஆணைக்குழு: காரணம் இதோ!

அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டதாக இலங்கை தேசிய தேர்தல் ஆணைக்குழு  வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேற்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சின்னங்கள் கிரீடம் மற்றும் விவசாயி.

இரண்டு சின்னங்களும் முன்னர் "அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படவில்லை" என்ற பிரிவின் கீழ் சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.அத்துடன் ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளன.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒஇது குறித்து தெரிவிக்கையில், 

இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக இருப்பதால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இதன்காரணமாகஇ ஒரு அரசியல் கட்சிக்கு சின்னமாக ஒதுக்கப்படக் கூடாது என்றும், எதிர்காலத்தில் நாட்டின் எந்த அரசியல் கட்சியும் அதை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் ஆணையம் கருதுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!